சினிமா செய்திகள்

திரைக்கு வரும் அமலாபாலின் சர்ச்சை படம் + "||" + Amlapal's controversial film

திரைக்கு வரும் அமலாபாலின் சர்ச்சை படம்

திரைக்கு வரும் அமலாபாலின் சர்ச்சை படம்
கணவரை விவாகரத்து செய்த பிறகு அமலாபால் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
ரத்னகுமார் இயக்கிய ‘ஆடை’ படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் படங்களில் எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடித்தது இல்லை. 

சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் இருந்தன. சமூக வலைத் தளத்தில் இந்த டிரெய்லரை அதிகமானோர் பார்த்தனர். நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும் அத்தனை நாட்களும் அமலாபால் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது. 

அமலாபாலின் துணிச்சலுக்கு வலைத்தளத்தில் பாராட்டும் எதிர்ப்புகளும் கிளம்பின.

விஜய் சேதுபதி ஜோடியாக ஒப்பந்தம் செய்து இருந்த படத்தில் இருந்து அமலாபாலை நீக்கி விட்டனர். ஆடை படத்தின் டிரெய்லரை பார்த்தே தன்னை நீக்கியதாக அமலாபால் குற்றம் சாட்டினார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆடை படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு என்னை நீக்கி உள்ளனர். இது பட நிறுவனத்தின் பிற்போக்குத்தனத்தை காட்டுகிறது” என்று கண்டித்தார். இதனால் பரபரப்பான எதிர்பார்ப்பில் இருக்கும் ‘ஆடை’ படம் இன்னும் 2 வாரத்தில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் இன்னொரு டிரெய்லரை நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவரும், பிரபல இந்தி இயக்குனருமான அனுராக் காஷ்யப் சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்ச்சி படம் வெளியிட்ட அமலாபால்
மைனா, வேட்டை, தலைவா, வேலை இல்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபல கதாநாயகியான அமலாபால் ஆடை படத்தில் உடைகள் அணியாமல் நிர்வாணமாக துணிச்சலாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
2. ‘வெப் தொடரில், அமலாபால்!
வட இந்திய நடிகர்-நடிகைகளைப் போல் தென்னிந்திய நடிகர்-நடிகைகளும் ‘வெப்’ தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த பட்டியலில் புதிதாக, அமலாபால் இணைந்து இருக்கிறார். இதுபற்றி அவர் சொல்கிறார்:-
3. அமலாபால் மீது பரிதாபப்பட்ட டைரக்டர்!
அமலாபால் நிர்வாணமாக நடித்த `ஆடை' படம் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
4. அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி : ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மேலும் 2 நடிகைகள்
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.
5. “சமூகத்தில் சாதி-மதத்தால் அச்சம் நிலவுகிறது” - நடிகை அமலாபால்
அமலாபால் நிர்வாணமாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய ஆடை படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.