சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ 2-ம் பாகம் + "||" + Part 2 of Vijay Sethupathi's Sudu Kaavu

விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ 2-ம் பாகம்

விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ 2-ம் பாகம்
சூது கவ்வும் 2-ம் பாகத்திலும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்கும் மோகம் அதிகரித்து வருகிறது. ரஜினிகாந்தின் எந்திரன் படம் இரண்டாம் பாகமாக 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகமும் வந்தது. டார்லிங், கோ, மணல் கயிறு, மாரி, சண்டக்கோழி, தில்லுக்கு திட்டு படங்களின் 2-ம் பாகங்கள் வந்தன.

சூர்யா நடிப்பில் சிங்கம் படத்தின் 3 பாகங்கள் வெளியானது. கமல்ஹாசனின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கமல்ஹாசன் இதில் நடிக்க உள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த வரிசையில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. இந்த படம் 2013-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். நலன் குமாரசாமி இயக்கினார். சூது கவ்வும் 2-ம் பாகத்திலும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் விஷ்ணு விஷாலின் முண்டாசு பட்டி இரண்டாம் பாகத்தை எடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.