சினிமா செய்திகள்

பண பிரச்சினையில் முடங்கிய தனுஷ் படம் திரைக்கு வருகிறது + "||" + Dhanush movie is coming on screen

பண பிரச்சினையில் முடங்கிய தனுஷ் படம் திரைக்கு வருகிறது

பண பிரச்சினையில் முடங்கிய தனுஷ் படம் திரைக்கு வருகிறது
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா.’
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா.’ இதன் படப்பிடிப்பு கடந்த 2016-ம் ஆண்டே தொடங்கியது. ஆனால் நிதி நெருக்கடியால் படத்தை கவுதம் மேனன் பாதியில் நிறுத்தி விட்டு விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படப்பிடிப்பை நடத்தினார்.

சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கினார். ஒருவழியாக படப்பிடிப்பை முடித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் பண பிரச்சினையால் படம் வெளிவராமல் முடங்கியது. படத்தின் தயாரிப்பு நிறுவனமும் கவுதம் மேனனும் ஏற்கனவே சில படங்களுக்கு வாங்கிய கடன் பாக்கிகள் எனை நோக்கி பாயும் தோட்டா மீது விழுந்ததால் படம் வெளியாகவில்லை.

இந்த படத்தை திரைக்கு கொண்டுவருவது குறித்து வினியோகஸ்தர்கள் மத்தியில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. தற்போது சமரச தீர்வு ஏற்பட்டு உள்ளதாகவும் இந்த மாதம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி யூஏ சான்றிதழ் பெற்றுள்ளனர். நீண்ட தாமதத்துக்கு பிறகு படம் வெளியாவது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.