சினிமா செய்திகள்

விக்ரம் பட டைரக்டர் ஆனந்த் ஷங்கர் திருமணம் + "||" + Vikram movie Director Married Anand Shankar

விக்ரம் பட டைரக்டர் ஆனந்த் ஷங்கர் திருமணம்

விக்ரம் பட டைரக்டர் ஆனந்த் ஷங்கர் திருமணம்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆனந்த் ஷங்கர்.
இவர் விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்த அரிமா நம்பி படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார். பின்னர் விக்ரம்-நயன்தாரா ஜோடியாக நடித்த இருமுகன் படத்தை இயக்கினார்.

தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தெலுங்கில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் நோட்டா படத்தை டைரக்டு செய்தார். ஆனந்த் ஷங்கர் திவ்யங்கா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் சென்னையில் நடந்தது. திரையுலகினர் மற்றும் உறவினர்கள் நேரில் வாழ்த்தினார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...