சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்க வரலாமா? ரசிகர்களிடம் கருத்து கேட்ட நடிகை குஷ்பு + "||" + should i come back in cinima? Kusboo

மீண்டும் நடிக்க வரலாமா? ரசிகர்களிடம் கருத்து கேட்ட நடிகை குஷ்பு

மீண்டும் நடிக்க வரலாமா?  ரசிகர்களிடம்  கருத்து கேட்ட நடிகை குஷ்பு
மீண்டும் நடிக்க வரலாமா? என்று ரசிகர்களிடம் நடிகை குஷ்பு கேட்ட கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை,

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து கொடிகட்டிப் பறந்த நடிகை குஷ்பு, சினிமாவிலிருந்து விலகிய பிறகு தீவிர அரசியலில் உள்ளார். இந்நிலையில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கலாமா?என்று ரசிகர்களிடம் நடிகை குஷ்பு சமூக வலைதளம் கருத்து கேட்டிருந்தார். 

இப்பதிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரசிகர்கள், மீண்டும் நடிக்க வரும் குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள குஷ்பு, சிறந்த கதைகளை இனி கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.