சினிமா செய்திகள்

மீண்டும் காதலில் அமலாபால் + "||" + Amala Paul in love again

மீண்டும் காதலில் அமலாபால்

மீண்டும் காதலில் அமலாபால்
இளைஞர் ஒருவரை காதலிப்பதாக நடிகை அமலாபால் கூறியுள்ளார்.
அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் 2014-ல் காதலித்து திருமணம் செய்து 2017-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமீபத்தில் விஜய்க்கு 2-வது திருமணம் நடந்தது. மணமக்களுக்கு அமலாபால் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனக்கும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த நிலையில் இளைஞர் ஒருவரை காதலிப்பதாக அமலாபால் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

“நான் ஒருவருடன் காதல் உறவில் இருக்கிறேன். என் வாழ்க்கையில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அவர்தான் காரணம். ஒரு தாயால் மட்டுமே நிபந்தனையற்ற அன்பை கொடுக்க முடியும் என்றும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய முடியும் என்றும் எண்ணி இருந்தேன்.

ஆனால் தன்னாலும் அதை தர முடியும் என்று அவர் நிரூபித்து இருக்கிறார். சினிமா மீது எனக்கு இருக்கும் ஈடுபாடுகள் அவருக்கு நன்றாகவே தெரியும். என்னை எப்போதும் அவர் பாராட்டுவது இல்லை. நடிகர்-நடிகைகள் தங்களை பாராட்டுகிறவர்களை மட்டுமே அருகில் வைத்து இருப்பார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன்.

என்னை சுற்றி இருந்தவர்கள் உண்மை பேசியது இல்லை. இந்த நிலையில் எனது மூன்றாவது கண்ணை திறந்து வைத்தவர் அவர்தான். என்னிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினார். என் வாழ்க்கையின் உண்மையும் அவர்தான்”

இவ்வாறு அமலாபால் கூறினார்.