சினிமா செய்திகள்

இணையதளத்தில் வெளியான கடாரம் கொண்டான், ஆடை + "||" + kadaramkondm, Aadai Movies are Published on the website

இணையதளத்தில் வெளியான கடாரம் கொண்டான், ஆடை

இணையதளத்தில் வெளியான கடாரம் கொண்டான், ஆடை
திருட்டு வி.சி.டி.க்கு பிறகு தற்போது புதிதாக முளைத்துள்ள திருட்டு இணையதளங்கள் தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக உள்ளன.
புதிதாக திரைக்கு வரும் படங்கள் அனைத்தும் உடனுக்குடன் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வந்துவிடுகின்றன. இதனை கட்டுப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சிகள் எடுத்தது.

தியேட்டர்களுக்குள் கேமரா கொண்டு செல்ல தடை விதித்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தையும் இதில் வெளியிட்டு ஹாலிவுட்டையே அதிர வைத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான், அமலாபால் நிர்வாணமாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய ஆடை ஆகிய 2 படங்களும் திரைக்கு வந்தன. இந்த படங்களையும், த லயன் கிங் ஹாலிவுட் படத்தையும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர். இவற்றை பலரும் பதிவிறக்கம் செய்து பார்க்கிறார்கள். இதனால் வசூல் பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் டி.வி.யில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 தொடரும் தற்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் உடனுக்குடன் வெளியாகி வருகிறது.

இதை பார்த்து பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இணையதள முகவரியை அடிக்கடி மாற்றுவதால் இதனை கண்டுபிடித்து தடுக்க முடியாமல் திரையுலகினர் தவிக்கின்றனர்.