சினிமா செய்திகள்

குழந்தை இல்லாததால் கணவரை பிரிந்த நடிகை தியா மிர்ஸா + "||" + Because of the childlessness Husband split actress Dia Mirza

குழந்தை இல்லாததால் கணவரை பிரிந்த நடிகை தியா மிர்ஸா

குழந்தை இல்லாததால் கணவரை பிரிந்த நடிகை தியா மிர்ஸா
தமிழில் அரவிந்தசாமி நடித்த என் சுவாசக்காற்றே படத்தில் அறிமுகமானவர் தியா மிர்ஸா. அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. இதனால் இந்திக்கு சென்று அதிக படங்களில் நடித்தார். அங்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தியா மிர்ஸாவுக்கும், சாஹில் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
2014 அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை தியா மிர்ஸா அறிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-


“எனது கணவரும் தொழில் பங்குதாரருமான சாஹிலும் நானும் பிரிவது என்று பேசி ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். இருவருமே சேர்ந்து விவாகரத்து செய்வதற்கான முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த முடிவில் இருவருக்கும் உடன்பாடு உள்ளது.

திருமண வாழ்க்கையில் இருந்து நாங்கள் பிரிந்து விட்டாலும் நல்ல நண்பர்களாக இருப்போம். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுகுறித்து மேலும் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.” இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்து தியா மிர்ஸா ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். குழந்தை இல்லாத காரணத்தாலேயே இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.