சினிமா செய்திகள்

கதாநாயகனாக இருந்து வில்லனாக...! + "||" + From the hero to the villain ...!

கதாநாயகனாக இருந்து வில்லனாக...!

கதாநாயகனாக இருந்து வில்லனாக...!
‘தப்பாட்டம்’ படத்தில் கதாநாயகனாக நடித்த துரை சுதாகர், சமீபத்தில் திரைக்கு வந்த ‘களவாணி-2’ படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.
அரசியல்வாதி வேடத்தில் பயமுறுத்திய அவர் கூறுகிறார்:-

‘‘பொதுவாக படங்களில் கதாநாயகனுக்குத்தான் பெயர் கிடைக்கும். ஆனால், ‘களவாணி-2’ படத்தில் விமல், ஓவியாவுடன் எனக்கும் பெயர் கிடைத்தது. இது, எனக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரத்தை தேடிக்கொண்டிருந்த எனக்கு இந்த படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது.

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். தற்போது, ‘டேனி’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறேன்.’’