சினிமா செய்திகள்

எனக்கு மாப்பிள்ளை பார்க்கின்றனர் -நடிகை தமன்னா + "||" + Trying to groom - Actress Tamanna

எனக்கு மாப்பிள்ளை பார்க்கின்றனர் -நடிகை தமன்னா

எனக்கு மாப்பிள்ளை பார்க்கின்றனர் -நடிகை தமன்னா
எனக்கு திருமணம் செய்துவைக்க, எனது வீட்டில் மாப்பிள்ளை பார்க்கின்றனர் என்று நடிகை தமன்னா கூறினார்.
தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் நடிக்கிறார். இப்போது அவருக்கு 29 வயது ஆகிறது. சினிமா வாழ்க்கை, திருமணம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் ஆண்டுக்கு 4, 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. மற்றவர்கள் மாதிரி அதிகம் படங்கள் உங்களுக்கு இல்லையே ஏன் என்று கேட்கிறார்கள். நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நிறைய நடித்துவிட்டேன். இன்னும் அதே மாதிரி நடிக்க வேண்டாம் என்று தோன்றியது.

இந்த காரணத்தினால்தான் எனது படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனது வெற்றியின் ரகசியம் உண்மையாக வேலை செய்வதுதான். செய்கிற வேலையை மனபூர்வமாக ஒன்றி செய்தாலே வெற்றிகள் தேடி வரும். படப்பிடிப்பில் இருக்கும்போது எனது அம்மா வந்து பேசினாலும் பேசமாட்டேன். போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுவேன். என்னுடையை குணம் தெரிந்த எல்லோரும் வீணாக போன் செய்து தொல்லை கொடுக்கமாட்டார்கள்.

உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர். எனது அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதனால் மாப்பிள்ளை தேடுதல் வேட்டையில் அவர் பிஸியாக இருக்கிறார். திருமண விஷயத்தை எனது பெற்றோர் முடிவுக்கே விட்டு விட்டேன்.”

இவ்வாறு தமன்னா கூறினார்.