சினிமா செய்திகள்

விஜய் ஜோடி கியாரா அத்வானி? + "||" + Vijay pair Kiara Advani?

விஜய் ஜோடி கியாரா அத்வானி?

விஜய் ஜோடி கியாரா அத்வானி?
விஜய் ஜோடியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்து வரும் ‘பிகில்’ பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இதில் விஜய் தந்தை-மகன் என்று இரட்டை வேடங்களில் வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அட்லி இயக்குகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு பிறகு ‘மாநகரம்’ படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 64-வது படமாகும். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதில் கதாநாயகிகளாக ராஷி கண்ணா, ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக பேசப்பட்டது. அதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் விஜய் ஜோடியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கதை கியாராவுக்கு பிடித்து இருப்பதாகவும் விஜய் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவது குறித்து அவர் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தமிழ் படங்களில் மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

கியாரா அத்வானி முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து இருந்தார். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் பாரத் அனே நேகு படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கான கபீர்சிங் படத்தில் நடித்தும் பிரபலமானார். இந்த படம் ரூ.275 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது.