சினிமா செய்திகள்

வெப் தொடர்களில் மீனா, மனிஷா கொய்ராலா + "||" + Meena and Manisha Koirala in web series

வெப் தொடர்களில் மீனா, மனிஷா கொய்ராலா

வெப் தொடர்களில் மீனா, மனிஷா கொய்ராலா
நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
நித்யாமேனன் ‘பிரீத்’ என்ற வெப் தொடரிலும் பிரியாமணி ‘பேமிலிமேன்’ தொடரிலும் நடிக்கின்றனர். பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோரும் வெப் தொடருக்கு வந்துள்ளனர். பிரசன்னா ஏற்கனவே வெப் தொடரில் நடித்துள்ளார். பரத், ரோபோ சங்கர், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் வெப் தொடரில் நடிக்கின்றனர். இந்தியில் அக்‌ஷய்குமார் ‘த என்ட்’ என்ற வெப் தொடரிலும், அர்ஜுன் ராம்பால் ‘த பைனல் ஹால்’ தொடரிலும் நடிக்கின்றனர். ஜாக்கி ஷெராப், அபிஷேக் பச்சன், கியூமா குரோஷி, நவாஜுதீன் சித்திக், விவேக் ஓபராய், கரீஷ்மா கபூர், கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கின்றனர்.

தெலுங்கில் சிரஞ்சீவியின் சகோதரர் மகள் நிகாரிகா, நடிகர் மஞ்சு விஷ்ணு, சந்தீப் கிஷன், அமலா, மஞ்சு லட்சுமி, ராணா, ஜெகபதி பாபு, நவதீப், தேஜஸ்வி, ஜே.டி.சக்கரவர்த்தி ஆகியோர் வெப் தொடருக்கு மாறி உள்ளனர்.

இப்போது புதிதாக மீனாவும் ‘கரோலின் காமாட்சி’ என்ற வெப் தொடரில் நடிக்க வந்துள்ளார். இதில் ஜியோர்ஜியா அன்ரியானியும் முக்கிய வேடத்தில் வருகிறார். அதிரடி மற்றும் நகைச்சுவை தொடராக தயாராகிறது. இதுபோல் மனிஷா கொய்ராலா ‘மஸ்கா’ என்ற இந்தி வெப் தொடரில் நடிக்கிறார். நடிகையாக நான் பெருமைப்படும் வகையில் இந்த தொடர் இருக்கும் என்று அவர் கூறினார்.