சினிமா செய்திகள்

ரெஜினாவை ஒதுக்கும் பெரிய நடிகர்கள் + "||" + Big actors avoiding Regina

ரெஜினாவை ஒதுக்கும் பெரிய நடிகர்கள்

ரெஜினாவை ஒதுக்கும் பெரிய நடிகர்கள்
தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள ரெஜினா இன்னும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. படங்களும் குறைந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு வராதது ஏன்? என்று எல்லோரும் கேட்கிறார்கள். அது ஏன்? என்பது எனக்கும் தெரியவில்லை. நான் நடித்த படங்கள் அனைத்துமே ‘ஹிட்’ ஆகியுள்ளது.

எல்லா படங்களும் நினைவில் நிற்கும்படி நல்ல பெயரைத்தான் வாங்கி கொடுத்துள்ளன. தெலுங்கில் நடித்துள்ள ‘ஆவ்’ எனும் படம் தேசிய விருது பெற்றுள்ளது. அந்த படத்தில் ‘மேக்கப்’ தான் முக்கிய அம்சம். அதற்கு நான் ஒரு முக்கிய காரணம் என்று பாராட்டுகள் குவிந்தன. அந்த படத்தில் நான் மேக்கப் போட 20 மணி நேரம் ஆனது. அப்படி கஷ்டப்பட்டு நடித்தேன்.

எப்போதுமே கதையை நான் பார்ப்பதில்லை. அதில் எனது கதாபாத்திரம் தான் முக்கியம். ஒரு நடிகையாக நான் அந்த கதாபாத்திரத்தில் என்ன செய்ய முடியும்? என்று தான் யோசிப்பேன். இந்த கதாபாத்திரம் எதிர்காலத்துக்கு உதவுமா? ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதையெல்லாம் யோசிக்கவே மாட்டேன். இதனால் அடையபோகும் பலன் பற்றி கவலைப்படுவது இல்லை. என்னை நம்பி கொடுக்கும் கதாபாத்திரத்தை முழுமையாக செய்யவேண்டும் என்பது மட்டுமே முக்கியம். எதிர்காலம் பற்றி எனக்கு கவலையில்லை.”

இவ்வாறு ரெஜினா கூறினார்.