சினிமா செய்திகள்

மாநாடுக்கு போட்டியாக புதிய படத்தில் சிம்பு + "||" + Simbu in new film as contestant for conference

மாநாடுக்கு போட்டியாக புதிய படத்தில் சிம்பு

மாநாடுக்கு போட்டியாக புதிய படத்தில் சிம்பு
வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாகவும் மே மாதம் படப் பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்தனர்.
வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாகவும் மே மாதம் படப் பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்தனர். ஆனால் படப்பிடிப்பு தொடங்காமல் தாமதமாகி வந்தது. இதைத்தொடர்ந்து படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

அவர் கூறும்போது, “எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்ய வேண்டும். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிகழ்ந்ததே தவிர படத்தை தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும்” என்றார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு பதிலாக நடிக்கும் புதிய கதாநாயகன் தேர்வு நடக்கிறது. மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்கியது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாநாடுக்கு போட்டியாக ‘மகா மாநாடு’ என்ற புதிய படத்தில் சிம்பு நடித்து, இயக்கி, தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகா மாநாடு படத்தை, மாநாடு படத்துக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.