சினிமா செய்திகள்

கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம் + "||" + The saree of Kangana Price Rs. 600 Handbag Rs. 2 Lakhs

கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்

கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்
இந்தி நடிகைகள் அணியும் உடைகள், கையில் வைத்திருக்கும் பொருட்கள் பிரபலமாகி விடுகின்றன. ரசிகர்கள் அதற்கான விலைகளையும் கண்டுபிடித்து பதிவிடுகிறார்கள்.
ஐஸ்வர்யாராய், பிரியங்கா சோப்ரா, ஜான்வி கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் வைத்திருக்கும் விலை உயர்ந்த கைப்பைகள், கடிகாரங்கள், காலணிகள் போன்றவை ஏற்கனவே சமூக வலைத்தளத்தை அதிர வைத்துள்ளன.

இப்போது கங்கனா ரணாவத் கைப்பையும் வைரலாகி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஜவுளி கடைக்கு சென்று ஆர்கானிக் காட்டன் புடவையை கங்கனா வாங்கினார். இதன் விலை 600 ரூபாய். இந்த சேலையை அணிந்துகொண்டு ஜெய்ப்பூருக்கு கிளம்பினார். விமான நிலையத்தில் கங்கனா ரணாவத்தை பார்த்த ரசிகர்கள் வியந்தனர்.


காரணம் அவர் உடுத்தி இருந்த சேலை விலை குறைவாக இருந்தாலும் கையில் வைத்திருந்து கைப்பை விலை ரூ.2 லட்சம் ஆகும். இந்தி நடிகைகள் கைப்பைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதை இது பிரதிபலித்தது. விமான நிலையத்தில் திரளும் புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுப்பதற்காகவே அதிக செலவில் கைப்பை, ஷூக்களுடன் வருகிறார்கள்.

கங்கனா ரணாவத்தின் 600 ரூபாய் சேலை, ரூ.2 லட்சம் கைப்பை புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா
‘தலைவி’ ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். விஜய் டைரக்டு செய்கிறார்.