சினிமா செய்திகள்

தேசிய விருது பற்றி கவிஞர் வைரமுத்து கருத்து + "||" + Poet Vairamuthu comments on National Award

தேசிய விருது பற்றி கவிஞர் வைரமுத்து கருத்து

தேசிய விருது பற்றி கவிஞர் வைரமுத்து கருத்து
தேசிய விருதுகள் பற்றி கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பற்றி கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:-

”பல துறைகளைப் போலவே இந்த ஆண்டு தேசிய விருதுகளிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாய்த் திரையுலகம் கவலை தோய்ந்த முகத்துடன் காட்சி தருகிறது. இந்த ஆண்டு தகுதிமிக்க சில தமிழ்ப் படங்கள் போட்டியில் கலந்துகொண்டிருந்தன. அவை தேசிய விருதுகளை அள்ளிவரும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மற்றவர்களைப் போலவே எனக்கும் இருந்தது. ஆனால் எதிர்பாராத ஏமாற்றமே மிஞ்சியது.

எதிர்பார்க்கும்போது கிட்டாததும், சற்றும் எதிர்பாராதபோது கிட்டுவதும்தான் தேசியவிருதுகளின் எழுதப்படாத விதி என்ற போதிலும், இந்த முறை தமிழ்ப் படங்கள் தண்டிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. இதில் அரசியல் இருக்கும் என்று நான் நம்பவில்லை; இருந்தால், அதைப்போல் வருந்தத்தக்கது எதுவுமில்லை. அரசியலில் கலை இருக்கலாம்; ஆனால் கலையில் அரசியல் இருக்கக்கூடாது” என்கிறார், கவிஞர் வைரமுத்து.