முதன் முதலாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார், காஜல் அகர்வால்!


முதன் முதலாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார், காஜல் அகர்வால்!
x
தினத்தந்தி 22 Aug 2019 10:00 PM GMT (Updated: 22 Aug 2019 11:44 AM GMT)

விஜய் சேதுபதி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய தெலுங்கு படத்தில் ஒன்று, ‘அவ்.’ காஜல் அகர்வால், நித்யாமேனன், ரெஜினா உள்பட பல முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்து இருந்தனர். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது.

இரண்டாம் பாகத்திலும் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இரண்டு பேரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்கிறார், படத்தின் டைரக்டர் பிரசாந்த் வர்மா.

“முதல் பாகத்தில் பல கதைகள் வந்து போனது. இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே கதை மட்டுமே இருக்கும்” என்றும் கூறுகிறார், பிரசாந்த் வர்மா.

Next Story