அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்?


அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்?
x
தினத்தந்தி 23 Aug 2019 4:30 AM GMT (Updated: 2019-08-23T05:55:51+05:30)

அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல வசூலும் பார்த்துள்ளது. படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

தற்போது அஜித்குமார் உடல் எடையை குறைத்து புதிய படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத்தே டைரக்டு செய்கிறார். இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக படத்தை தயாரிக்கும் போனிகபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்குமார் மோட்டார் பந்தய வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம் பெறுகின்றன. இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அருண் விஜய் நடித்து இருந்தார். அந்த படத்துக்கு பிறகு அருண் விஜய்க்கு அதிக படவாய்ப்புகள் குவிந்தன. எனவே மீண்டும் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story