சினிமா செய்திகள்

குற்றாலீஸ்வரன், நடிகர் அஜித் சந்திப்பு + "||" + Kuraliswaran and actor Ajith meet

குற்றாலீஸ்வரன், நடிகர் அஜித் சந்திப்பு

குற்றாலீஸ்வரன், நடிகர் அஜித் சந்திப்பு
நடிகர் அஜித் மற்றும் நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் சந்திப்பு தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குற்றால ரமேஷ் என்கிற குற்றாலீஸ்வரன் இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். மேலும் இவருக்கு இந்திய அரசாங்கம் 1996-ம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கியது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமான நடிகர் அஜித் மற்றும் நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் சந்திப்பு தொடர்பான புகைப்படம்  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  

இதனையடுத்து, இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள குற்றாலீஸ்வரன், 

நடிகர் அஜித்தை சந்தித்தது நம்ப முடியாத தருணம் என்றும், அவர் தனது ரசிகர் என்று கூறியது தன்னைஆச்சர்யப்பட வைத்ததாகவும்,  அவரது எளிமை வியப்பாக இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும் விளையாட்டு மேம்பாடு தொடர்பாக சில முன்னெடுப்புகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.