நடிகை ஜுகி சென்குப்தாவை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியா்கள்


நடிகை ஜுகி சென்குப்தாவை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியா்கள்
x
தினத்தந்தி 26 Aug 2019 7:19 AM GMT (Updated: 2019-08-26T12:49:56+05:30)

பெட்ரோல் பங்க் ஊழியா்களால் தொலைக்காட்சி நடிகை ஜுகி சென்குப்தா தாக்கப்பட்டாா்.

கொல்கத்தா

மேற்கு  வங்காள மாநிலம் தெற்கு கொல்கத்தாவில்   கஸ்பா பகுதியில் உள்ள  பெட்ரோல் பங்க்  ஒன்றிற்கு பெங்காலி டிவி நடிகை ஜுகி சென் குப்தா தனது பெற்றோருடன் காருக்கு பெட்ரோல் நிரப்ப  சென்றார்.

ஜுகி கேட்டதை விட அதிகமாக வாகனத்தில் பெட்ரோல் நிரப்பியதால் ஊழியர்கள்  மற்றும் அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது நடிகையின் தந்தை பணம் கொடுக்காமல்  எதிா்ப்பு தொிவித்ததால் அவரை பெட்ரோல் பங்க் ஊழியா்கள் கடுமையாக தாக்கினா்.  நடிகை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு ஊழியர்கள் பணம் கொடுக்கவில்லை என நடிகையின் வாகன சாவியை  பறித்து சென்று விட்டனர். இதனால் நடிகையின் குடும்பத்தினா் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடா்பு கொண்டனா் .

சம்பவ இடத்திற்கு வந்த போலீசாா் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனா், இதுவரை  யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசாா் கூறி உள்ளனர்.

Next Story