“பிரபாஸின் சாஹோ” தென்னிந்திய திரைப்படத்தில் அதிக வசூல் செய்த 4-வது படம்


“பிரபாஸின் சாஹோ” தென்னிந்திய திரைப்படத்தில் அதிக வசூல் செய்த 4-வது படம்
x
தினத்தந்தி 4 Sep 2019 6:10 AM GMT (Updated: 4 Sep 2019 6:10 AM GMT)

பிரபாஸின் சாஹோ ரஜினிகாந்தின் எந்திரன், கபாலி வசூலை முந்தி தென்னிந்திய திரைப்படத்தில் அதிக வசூல் செய்த 4-வது படமாக உள்ளது.

சென்னை,

பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படம் வெளியான நான்கே நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

பிரபாஸின் சாஹோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் (ரூ.289) மற்றும்  கபாலி (ரூ.286) ஆகிய வசூல் சாதனைகளை  நான்கு நாட்களில் முறியடித்து உள்ளது. தென்னிந்தியாவின் அதிக வசூல் செய்த நான்காவது படமாக திகழ்கிறது.

சாஹோ முதல் நாள் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ .125 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த திரைப்படம் 2019-ம் ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனர்  மட்டுமல்ல, வரலாற்று பிளாக்பஸ்டர் பாகுபலி 2-க்கு பிறகு இரண்டாவது பெரிய ஓப்பனராக மாறியது. பாகுபலி முதல் நாளில் உலகளவில் ரூ.214 கோடியை ஈட்டியுள்ளது.

சாஹோவின் இந்தி பதிப்பு நான்கு நாட்களில் வட இந்திய பாக்ஸ் ஆபிசில் ரூ.93.28 கோடி வசூலித்துள்ளது.

வாய்மொழியாக இந்தப் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் பரவியுள்ளன. மேலும், சாஹோ திரைப்படத்துக்கான கடும் பொருட்செலவு, தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை மீறி பலவீனமான கதையால் பின்னடைவு கண்டுள்ளதாக பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.

சாஹோ நான்கு நாட்களில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.331 கோடி வசூல் செய்துள்ளது.

350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பை இப்படம் ஈடு செய்யுமா என்பது இனிவரும் நாட்களில் தெரிய வரும்.

அதன் தற்போதைய வசூல் வேகத்தை பார்க்கும் போது பாகுபலி 2 சாதனையை முறியடிக்க முடியாது. பாகுபலி தென்னிந்திய திரைப்படத்தின் மிக அதிக வசூல் ஆகும்  (1740 கோடி ரூபாய்). ஆனால் இந்த படம் 2.0 (ரூ.620 கோடி மொத்தம்) மற்றும் பாகுபலி 1 (ரூ. 570 கோடி மொத்தம்) சாதனைகளை வெல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story