சினிமா செய்திகள்

குண்டும் குழியுமான சாலைகள்: சமூக வலைத்தளத்தில் சாடிய குஷ்பு + "||" + Roads are damaged: Khushboo angry on social media

குண்டும் குழியுமான சாலைகள்: சமூக வலைத்தளத்தில் சாடிய குஷ்பு

குண்டும் குழியுமான சாலைகள்:  சமூக வலைத்தளத்தில் சாடிய குஷ்பு
முன்னணி கதாநாயகியாக இருந்து அரசியலுக்கு வந்த குஷ்பு சமூக பிரச்சினைகள் குறித்து அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார். சர்ச்சை விஷயங்களில் துணிச்சலாக கருத்தும் சொல்கிறார்.
மக்களை பாதிக்கும் நிகழ்வுகள் நடந்தால் அவற்றை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை சாந்தோமில் உள்ள குஷ்பு வீட்டின் அருகில் ஒரு வாகனம் நம்பர் பிளேட் இல்லாமல் நீண்ட நாட்களாக நின்று கொண்டு இருந்தது. அதை படம் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்தார். போக்குவரத்து போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாகனத்தை கைப்பற்றினர்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குண்டும் குழியுமான சாலையில் சென்ற ஆட்டோ ஒன்று கவிழ்ந்து அதில் இருந்த பெண்கள் மீட்கப்படும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். “இந்த விபத்து எங்கு நடந்தது என்று தெரியவில்லை. ஆனாலும் பெரும்பாலான நகரங்களில் உள்ள சாலைகள் இப்படித்தான் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுபோன்ற சாலைகளை மாநகராட்சிகள் ஏன் கண்டு கொள்வது இல்லை. ஒரு மழையிலேயே சாலைகள் இப்படி ஆகிவிடுகின்றன. ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்றும் கருத்து பதிவிட்டுள்ளார். குஷ்புவின் சமூக அக்கறையை சமூக வலைத்தளத்தில் பலர் பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டம்: குஷ்பு, பிரியங்கா சோப்ரா எதிர்ப்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை சித்தார்த், மம்முட்டி, பிருதிவிராஜ், அமலாபால், பார்வதி உள்ளிட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகள் ஏற்கனவே கண்டித்துள்ளனர்.
2. சகிப்பு தன்மையே மதம்: குஷ்புவை பாராட்டிய கஸ்தூரி
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த குஷ்பு தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.