சினிமா செய்திகள்

ராணுவ கமாண்டோவாக தமன்னா + "||" + Army Commando Tamanna

ராணுவ கமாண்டோவாக தமன்னா

ராணுவ கமாண்டோவாக தமன்னா
‘கே டி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னா தொடர்ந்து விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, பிரபுதேவா, தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார்.
பாகுபலியில் அதிரடி சண்டை காட்சிகளில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

இது அவரது திரையுலகை வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது. இப்போது வழக்கமான காதல் காட்சிகள் இல்லாமல் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து ரூ.120 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திய குயின் படத்தின் தெலுங்கு பதிப்பான ‘தட் இஸ் மகாலட்சுமி’ படத்தில் நடித்துள்ளார்.


இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் தமன்னாவுக்கு முக்கிய வேடம். தற்போது விஷால் ஜோடியாக ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். முழு நீள சண்டை படமாக தயாராவதால் ஆக்‌ஷன் என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் தமன்னா பெண் ராணுவ கமாண்டோ அதிகாரியாக வருகிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் மற்றும் பிரத்யேகமாக சண்டைகள் கற்று நடித்து இருக்கிறார். விஷாலுக்கும் ராணுவ அதிகாரி வேடம். படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.