சினிமா செய்திகள்

தீபாவளிக்கு ‘பிகில்’, ‘கைதி’யுடன் மோதும் தமன்னா படம் + "||" + Tamanna movie for Diwali

தீபாவளிக்கு ‘பிகில்’, ‘கைதி’யுடன் மோதும் தமன்னா படம்

தீபாவளிக்கு ‘பிகில்’, ‘கைதி’யுடன் மோதும் தமன்னா படம்
தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படம் தீபாவளி போட்டியில் இணைந்துள்ளது.
தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்கள் வெளியாவதை ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளனர். தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் 3 தினங்களுக்கு முன்பாக வியாழக்கிழமையே பிகில் படத்தை ரிலீஸ் செய்ய வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் வற்புறுத்துவதாக கூறப்பட்டது.

இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறும்போது, “பிகில் ரிலீஸ் தேதி குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். படத்தின் தணிக்கை முடிந்ததும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” என்றார். தீபாவளிக்கு பிகில், கைதி ஆகிய 2 படங்கள் மட்டுமே வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படமும் தீபாவளி போட்டியில் இணைந்துள்ளது.

இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார். தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகிபாபு, காளி வெங்கட் ஆகியோரும் உள்ளனர். தெலுங்கில் வெளியான அனந்தோ பிரம்மா என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகி உள்ளது. நகைச்சுவை திகில் படமாக உருவாகி உள்ளது.

சிரஞ்சீவியுடன் தமன்னா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி, விஷால் ஜோடியாக நடித்துள்ள ஆக்‌ஷன் மற்றும் தெலுங்கில் நடித்துள்ள தட் ஈஸ் மகாலட்சுமி ஆகிய படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. மேலும் 2 தெலுங்கு படங்களிலும் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.