சினிமா செய்திகள்

“திருமணத்தில் நம்பிக்கை உள்ளது” - காஜல் அகர்வால் + "||" + “There is hope in marriage” - Kajal Agarwal

“திருமணத்தில் நம்பிக்கை உள்ளது” - காஜல் அகர்வால்

“திருமணத்தில் நம்பிக்கை உள்ளது” - காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் வைத்துள்ளார்.
காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“ரசிகர்கள் பாராட்டை பெற வேண்டும் என்றுதான் ஒவ்வொரு படத்தையும் எடுத்து வெளியிடுகின்றனர். நானும் ரசிகர்களை மனதில் வைத்தே நடிக்கிறேன். சினிமாவில் ஓய்வில்லாமல் இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் ஏதோ இழந்து விட்டோமோ என்று ஒருபோதும் நினைத்தது இல்லை.

விருப்பம் இல்லாத தொழிலை செய்யும் போதுதான் ஏண்டா இதற்குள் வந்தோம் என்ற வெறுப்பு இருக்கும். விரும்பி செய்தால் எந்த பெரிய பிரச்சினை வந்தாலும் துரும்பு மாதிரி தோன்றும். நான் கல்லூரி நாட்களில் இருந்து சினிமாவை நேசித்தேன். வேலையை நமது மகிழ்ச்சிக்காக செய்கிறோம் என்று நினைத்தால் அலுப்பே தட்டாது.

எத்தனை ஆண்டு நடித்தாலும் வெறுப்பு வராது. இன்னும் சினிமாவில் நீடிக்க வேண்டும் என்ற ஆர்வம் தான் இருக்கும். வாய்விட்டு சிரியுங்கள். நோய் விட்டு போகும். சிரிப்பு என்பது நல்ல மருந்து. உண்மையான சிரிப்பு ஆரோக்கியத்துக்கு நல்லது செய்யும். அதை தினசரி பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். திருமண பந்தத்தில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அதற்கு நான் தயாராகும்போது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஜல் அகர்வாலுக்கு திருமண நிச்சயதார்த்தம்? - ரகசியமாக நடந்ததாக பரபரப்பு
காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
2. சவால்களை விரும்பும் காஜல் அகர்வால்
சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
3. ஊரடங்கில் சமையல் கற்றேன் - காஜல் அகர்வால்
கொரோனா ஊரடங்கில் சமையல் கற்றுக்கொண்டதாக நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.