சினிமா செய்திகள்

இணைய தொடரில் பிரியாமணி நடிப்பது ஏன்? + "||" + Why is Priyamani acting in web series?

இணைய தொடரில் பிரியாமணி நடிப்பது ஏன்?

இணைய தொடரில் பிரியாமணி நடிப்பது ஏன்?
நடிகை பிரியாமணி தற்போது, இணைய தொடரிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், பிரியாமணி. தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் ஆகிய பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தமிழ் படங்களில் நடித்தது போல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் பிரியாமணி நடித்து இருந்தார்.

புகழ் பெற்ற தென்னிந்திய கதாநாயகியாக இருந்தபோதே முஸ்தபாராஜ் என்ற தொழில் அதிபரை, இவர் திருமணம் செய்து கொண்டார்.  வெள்ளித்திரையில் நடிப்பு திறமையை காட்டிய பிரியாமணி தற்போது, இணைய தொடரிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறிய தாவது:-

“பிரபல கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளில் பலர் இணைய தொடரில் நடித்து வருகிறார்கள். குறிப்பாக பல இந்தி நடிகர்-நடிகைகள் இணைய தொடர்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில், நான் ஏன் இணைய தொடர்களில் நடிக்க கூடாது?

‘தி பேமிலி மேன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த இணைய தொடரில், நடிப்பு திறமையை வெளிப்படுத்தக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது, சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு கணவன்-மனைவியை பற்றிய படம். அவர்களுக்கு இரு முனைகளில் இருந்து அழுத்தங்கள் வருகின்றன. அதை அந்த கணவன்-மனைவி எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.”