சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் கருணாஸ் மகன் + "||" + In the film Dhanush Son of Karunas

தனுஷ் படத்தில் கருணாஸ் மகன்

தனுஷ் படத்தில் கருணாஸ் மகன்
பி ரபல நடிகர் கருணாஸ் மகன், கென் ஏற்கனவே ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, ரகளை புரம், அழகு குட்டி செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 தற்போது ‘அசுரன்’ படத்தில் தனுஷ் மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படம் முழுவதும் வருவதுபோல் கென் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தில் நடித்தது பற்றி கென் கூறியதாவது:-

“அசுரன் படத்தில் தனுஷ்-வெற்றி மாறன் ஆகியோருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம், அவர்கள் இருவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். சிறிய பையன் என்று இல்லாமல் நன்றாக என்னை கவனித்துக்கொண்டனர். படத்தில் எனது நடிப்பு சிறப்பாக உள்ளதாக பாராட்டும் கிடைத்துள்ளது. தனுஷ் என்னிடம் இனிமையாக பழகினார். அவரது வீட்டு பையன்போல் பார்த்துக்கொண்டார். சிறுவயதிலேயே நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். பாடல்கள் பாடினேன். நடனம் ஆடவும் செய்தேன். எனது தந்தை கருணாஸ் எனக்குள்ள ஆர்வத்தையும் நடிப்பு திறமையையும் பார்த்து சினிமா துறைக்குள் நுழைய சம்மதித்தார்.


சினிமாவில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி இருக்கிறார். ‘அசுரன்’ படம் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அசுரன் படத்தில் ‘பொல்லாத பூமி’ என்ற பாடலை பாடி இருக்கிறேன்.”

இவ்வாறு கென் கூறினார்.