சினிமா செய்திகள்

இந்தியன்-2 படத்தில் கமலுக்கு வில்லனாக அனில்கபூர்? + "||" + In Indian-2 Anil Kapoor is the villain of Kamal

இந்தியன்-2 படத்தில் கமலுக்கு வில்லனாக அனில்கபூர்?

இந்தியன்-2 படத்தில் கமலுக்கு வில்லனாக அனில்கபூர்?
இந்தியன் படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் படமாகி வருகிறது.
இந்தியன் படம் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் படமாகி வருகிறது. காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகியோரும் உள்ளனர்.


இந்த படம் ரூ.200 கோடி செலவில் தயாராகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடந்தது. சித்தார்த், ரகுல் பிரீத் சிங் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வயதான சேனாதிபதி தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன் வருவதுபோன்ற காட்சியை எடுத்தனர்.

வளசரவாக்கத்தில் வில்லன்களை வயதான கமல்ஹாசன் வர்ம கலையால் தாக்கி சண்டை போடும் காட்சியும் படமாக்கப்பட்டது. இப்போது ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்குள்ள ஜெயிலில் விசேஷ அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.

வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகியோரிடம் பேசி வந்தனர். தற்போது அனில்கபூர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனில் கபூர் ஏற்கனவே முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன்-2 படப்பிடிப்பு அரங்கில் அனில்கபூர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.