சினிமா செய்திகள்

மீண்டும் கர்ப்பம் நடிகை சினேகாவுக்கு வளைகாப்பு + "||" + Baby Shower Back To Pregnant Actress Sneha

மீண்டும் கர்ப்பம் நடிகை சினேகாவுக்கு வளைகாப்பு

மீண்டும் கர்ப்பம் நடிகை சினேகாவுக்கு வளைகாப்பு
தமிழ் பட உலகில் என்னவளே படத்தில் அறிமுகமாகி 2000-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகா பெரிய கதாநாயகர்கள் ஜோடியாக நடித்துள்ளார்.
கமல்ஹாசனுடன் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், விஜய்யுடன் வசீகரா, அஜித்குமாருடன் ஜனா, விக்ரமுடன் கிங், சூர்யாவுடன் உன்னை நினைத்து, தனுசுடன் புதுப்பேட்டை, சிம்புவுடன் சிலம்பாட்டம் படங்களில் நடித்துள்ளார்.

ஆட்டோகிராப், பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். அவை திருப்புமுனை படங்களாகவும் அமைந்தன. சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டனர்.


பெற்றோர் சம்மதத்துடன் 2012-ல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சினேகா இப்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினேகா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக பிரசன்னா சமீபத்தில் கூறியிருந்தார்.

சினேகாவுக்கு வளைகாப்பு சீமந்த நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். வளைகாப்பு சீமந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த படங்களை பார்த்த ரசிகர்கள் சினேகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.