சினிமா செய்திகள்

தெலுங்கு படத்தில்கபடி பயிற்சியாளராக நடிக்கிறார், தமன்னா! + "||" + Kabaddi plays coach, Tamanna

தெலுங்கு படத்தில்கபடி பயிற்சியாளராக நடிக்கிறார், தமன்னா!

தெலுங்கு படத்தில்கபடி பயிற்சியாளராக நடிக்கிறார், தமன்னா!
நடிகை தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்கிறார்.
நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால், சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சாய் தன்ஷிகா, ரித்திகாசிங் ஆகிய நட்சத்திர நாயகிகள் அனைவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து தமன்னாவும் கதாநாயகிக்கு  முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்.

சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்து முடித்துள்ள இவர், ‘தேட் ஈஸ் மகாலட்சுமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. சம்பத் நந்தி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கபடி விளையாட்டு பயிற்சியாளராக தமன்னா நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கபடி பயிற்சியாளராக தமன்னா
தமன்னா வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி சரித்திர கதையில் வாள் சண்டையிடும் போர் வீராங்கணையாக வந்தார்.
2. ராணுவ கமாண்டோவாக தமன்னா
‘கே டி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னா தொடர்ந்து விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, பிரபுதேவா, தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார்.
3. பிரபாஸ் பற்றி புகழ்ந்து பேசுகிறார்!
பிரபாஸ் பற்றி தமன்னா புகழ்ந்து பேசுகிறாராம்.
4. திகில்-நகைச்சுவை படத்தில், தமன்னா!
நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள்.