சினிமா செய்திகள்

என்னை பற்றி அவதூறு : நடிகை யாஷிகா வருத்தம் + "||" + Actress Yashika is upset

என்னை பற்றி அவதூறு : நடிகை யாஷிகா வருத்தம்

என்னை பற்றி அவதூறு : நடிகை யாஷிகா வருத்தம்
பொய்யான தகவலை கூறி அவதூறு பரப்பி உள்ளனர் என்று நடிகை யாஷிகா கூறினார்.
சினிமாவில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் யாஷிகா ஆனந்த். இதனால் ஆபாச பட நடிகைகளுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டார். இதற்கு அவர் கண்டனமும் தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் யாஷிகாவின் சொகுசு கார் மோதி தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

விபத்து நடந்த போது காரில் யாஷிகாவின் நண்பர்கள் இருந்தனர் என்றும் யாஷிகா இருந்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் விபத்து குறித்து யாஷிகா விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கூறியதாவது:–

‘‘விபத்து நடந்த காரில் நான் இருந்ததாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை. அந்த காரில் நான் செல்லவில்லை. எனது நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது என்று கேள்விப்பட்டதும் நான் வேறு ஒரு காரில் விபத்து நடந்த இடத்துக்கு சென்றேன். இதனால் நானும் விபத்துக்குள்ளான காரில் இருந்ததாக பொய்யான தகவலை அவதூறாக பரப்பி உள்ளனர்.’’

இவ்வாறு யாஷிகா ஆனந்த் கூறினார்.