சினிமா செய்திகள்

பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்? + "||" + Another Simbu film stop?

பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்?

பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்?
சிம்பு நடிக்க இருந்த படம் கைவிட்டவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்கள் வெளிவந்தன. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர்.

ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கையில், “சிம்பு நடிக்க இருந்த மாநாடு பட வேலைகளை தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் மாநாடு படம் கைவிடப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது அவர் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது. மாநாடு படத்துக்கு போட்டியாக மகாமாநாடு படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கன்னட படமான மப்டி படத்தை சிம்புவை கதாநாயகானாக நடிக்க வைத்து தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தார். இதன் படபிடிப்பிலும் தாமதம் ஏற்பட்டு தனக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அவர் கைவிட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளர் சங்க குழுவினர் கூறும்போது சிம்பு மீதான புகார்களை விசாரித்து தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.