சினிமா செய்திகள்

தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை + "||" + Deepavalli upcoming movies are Pikil and kaithi are censored

தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை

தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை
விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படங்களை தணிக்கைக்கு அனுப்பி யூ சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
 2 படங்களையும் பார்த்த தணிக்கை குழுவினர் யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அதிக வன்முறை காட்சிகள் உள்ளதால் யூ சான்றிதழ் அளிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் வருகிறார். மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். திறமையான ஏழை கால்பந்து வீராங்கனைகள் அரசியல் சூழ்ச்சியால் முன்னேற முடியாமல் தவிப்பதும் அவர்களுக்கு பயிற்சியாளராக பொறுப்பு ஏற்கும் விஜய் சதியை முறியடித்து போட்டிகளில் ஜெயிக்க வைப்பதும் கதை.

படத்தை அட்லி இயக்கி உள்ளார். நயன்தாரா ஜோடியாக வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கைதி படத்தில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதி வேடத்தில் வருகிறார். அவர் சிறையில் இருந்து தப்பி வில்லன்களை பழி வாங்குவது கதை. கதாநாயகி இல்லாத சண்டை படமாக தயாராகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகி கொண்டது.