சினிமா செய்திகள்

நாகார்ஜுனா மகனை சந்தித்த சிவகார்த்திகேயன் + "||" + Sivakarthikeyan is meet at Nagarjuna's son

நாகார்ஜுனா மகனை சந்தித்த சிவகார்த்திகேயன்

நாகார்ஜுனா மகனை சந்தித்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்கள் வந்தன. இதில் மிஸ்டர் லோக்கல் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. நம்ம வீட்டு பிள்ளை நல்ல வசூல் பார்த்தது.
 ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இதில் கல்யாணி கதாநாயகியாக வருகிறார். அர்ஜுன், இவானா ஆகியோரும் உள்ளனர். சூப்பர் ஹீரோ கதையாக தயாராகிறது. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். டிசம்பர் இறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். ஐதராபாத்தில் ஹீரோ படப்பிடிப்பில் இருந்த சிவகார்த்திகேயனை பிரபல நடிகர் நாகார்ஜுனா-நடிகை அமலா தம்பதியின் மகனும் நடிகருமான அகில் தனது வீட்டுக்கு அழைத்தார்.

அதை ஏற்று அங்கு சென்ற சிவகார்த்திகேயனுக்கு அகில் விருந்து கொடுத்தார். பின்னர் இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா குறித்து நீண்ட நேரம் பேசினார்கள். சிவகார்த்திகேயனை சந்தித்த புகைப்படத்தை அகில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஹீரோ பட குழுவினருக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாக சிவகார்த்திகேயன் படங்களும் ஆந்திரா, தெலுங்கானாவில் திரையிடப்படுகின்றன. இதன் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படம் வசூல் குவித்தது. இந்த படத்தை தெலுங்கிலும் கவுசல்யா கிரிஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். இதில் கவரவ தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகார்த்திகேயனின் வித்தியாசமான வேடம்!
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் `டாக்டர்' படத்தை அவரே தயாரிக்கிறார். இதில் பிரியங்கா கதாநாயகியாக நடிக்கிறார்.
2. ‘அயலான்’ படத்தில் வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘அயலான்’ என்று பெயர் சூட்டப்பட்டதுமே அந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.