சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் டீசர் நாளை வெளியீடு + "||" + Teaser of Sivakarthikeyan Hero film will release by tomorrow

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் டீசர் நாளை வெளியீடு

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் டீசர் நாளை வெளியீடு
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'ஹீரோ' படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை,

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தின் டீசர் நாளை காலை 11.03 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் படம் 'ஹீரோ'.  இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜுன், இவானா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் படத்தின் டீசர் நாளை காலை 11.03 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.