சினிமா செய்திகள்

சமூக வலைத்தளத்தில் இந்தியன்-2 புகைப்படங்கள் கசிந்தன + "||" + Social website Indian-2 photos leaked

சமூக வலைத்தளத்தில் இந்தியன்-2 புகைப்படங்கள் கசிந்தன

சமூக வலைத்தளத்தில் இந்தியன்-2 புகைப்படங்கள் கசிந்தன
இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் தீவிரமாக நடித்து வருகிறார். காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால் ஆகியோரும் உள்ளனர்.
கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை முடித்து விட்டு இந்தியன்-2 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால் ஆகியோரும் உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதன்பிறகு ஐதராபாத்திலும் ராஜமுந்திரி சிறையிலும் படப்பிடிப்பை நடத்தினர்.


பின்னர் படப்பிடிப்பை போபாலுக்கு இயக்குனர் ஷங்கர் மாற்றினார். அங்கு 2 ஆயிரம் துணை நடிகர்களுடன் பிரமாண்ட சண்டை காட்சியை படமாக்கினர். படத்தில் கமல்ஹாசன் 90 வயது முதியவராக வருகிறார். வயதான தோற்றத்தில் வில்லன்களுடன் மோதுவதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

கமல்ஹாசனின் வயதான தோற்றத்தை ரகசியமாக வைத்து இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளன. வயதான தோற்றத்தில் இருக்கும் கமல்ஹாசனுக்கு மேக்கப் போடும் காட்சிகள், முதுமை தோற்றத்தில் குதிரையில் உட்கார்ந்து அவர் பயணிக்கும் புகைப்படம் ஆகியவை வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது. படப்பிடிப்பில் தனியார் பாதுகாவலர்களை நிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இந்தியன்-2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை தைவானில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் தைவான் புறப்பட்டு செல்கிறார்கள். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...