சினிமா செய்திகள்

இயக்குனராக மாறிய ராதிகா ஆப்தே + "||" + Radhika Apte became director

இயக்குனராக மாறிய ராதிகா ஆப்தே

இயக்குனராக மாறிய ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தே இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின. படுக்கை அறை காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார்.

இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் சொல்லியும் பரபரப்பு ஏற்படுத்தினார். அவர் கூறும்போது, தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மும்பை ஓட்டலில் தங்கி தனது புதிய படத்தில் நடிக்க என்னை அழைத்தார். கவர்ச்சியாக போஸ் கொடுக்கும்படி சொன்னார். ஆபாச அசைவுகளை செய்து காட்டும்படியும் கூறினார். அங்கிருந்து தப்பித்து வந்தேன்” என்றார்.

இந்த நிலையில் ராதிகா ஆப்தே இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஸ்லீப் வாக்கர்ஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் குல்சன் தேவய்யா, சஹானா கோஸ்வாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைரக்டரானது குறித்து ராதிகா ஆப்தே கூறும்போது, “நான் இயக்குனரானது திடீரென்று நடந்து விட்டது. இதன் மூலம் ஒரு படத்தை எப்படி இயக்க வேண்டும் என்று முழுமையாக கற்றுக்கொண்டேன்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் ஹனி ட்ரேஹன் கூறும்போது, “இது சமூகத்தை கேள்வி கேட்கும் வித்தியாசமான படம். இந்த படத்தின் மூலம் ராதிகா ஆப்தே திறமையானவர் என்பதை நிரூபித்துள்ளார்” என்றார்.