சினிமா செய்திகள்

“விரைவில் திருமணம்” -காஜல் அகர்வால் + "||" + Soon married - Kajal Agarwal

“விரைவில் திருமணம்” -காஜல் அகர்வால்

“விரைவில் திருமணம்” -காஜல் அகர்வால்
விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வாலுக்கு 34 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார்.

தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். ‘மும்பை சாகா’ என்ற ஒரு இந்தி படமும் கைவசம் உள்ளது.

இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலும் உறுதிப்படுத்தி உள்ளார். தெலுங்கு டி.வி. நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து அவர் பேசியதாவது:-

“நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அதுபோல் அவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும். என்னிடம் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும். அக்கறையோடு என்னை கவனித்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற குணம் உள்ளவரை மணப்பேன்.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியன்- 2 படப்பிடிப்பு விபத்து: அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன் - காஜல் அகர்வால்
இந்தியன்- 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.