சினிமா செய்திகள்

ஹன்சிகாவுக்கு ரூ.12 கோடி கார் பரிசு + "||" + For Hansika Rs 12 crore car prize

ஹன்சிகாவுக்கு ரூ.12 கோடி கார் பரிசு

ஹன்சிகாவுக்கு ரூ.12 கோடி கார் பரிசு
ஹன்சிகாவுக்கு அவரது தாய் மோனா மோத்வானி சொகுசு காரை தீபாவளி பரிசாக அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ஹன்சிகா. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அவரது மஹா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் வருகிறார். மஹா படத்தில் வரும் ஹன்சிகாவின் தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. படத்துக்கு  எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளது.

மேலும் 3 தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். வெப் தொடருக்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர். 50 படங்களில் அவர் நடித்து முடித்து விட்டதாக கூறப்படுகிறது. சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சமூக சேவை பணிகளுக்கு ஒதுக்குகிறார். தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்.

அந்த குழந்தைகளை படிக்கவைக்கிறார். உணவு, தங்குமிட வசதியும் செய்து கொடுத்துள்ளார். ஆதரவற்ற முதியோருக்கான இல்லமும் கட்டி வருகிறார். இந்த நிலையில் ஹன்சிகாவுக்கு அவரது தாய் மோனா மோத்வானி தீபாவளி பரிசாக ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் 8 சீரிஸ் வகை சொகுசு காரை பரிசாக அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த காரின் விலை ரூ.12 கோடி என்று கூறப்படுகிறது.