சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி-மேகா ஆகாஷ் ஜோடியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் + "||" + Yathum yoore yavarum kelir movie With Vijay Sethupathi-Mega Akash pair

விஜய்சேதுபதி-மேகா ஆகாஷ் ஜோடியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர்

விஜய்சேதுபதி-மேகா ஆகாஷ் ஜோடியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர்
விஜய்சேதுபதியும், மேகா ஆகாசும் முதன்முதலாக ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
மகிழ்திருமேனி, கனிகா, ரித்விகா, சிவரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக் கிறார்கள். இவர்களுடன் ஒரு ஜெர்மன் நாட்டு பெண்ணும் கதாநாயகியாக நடிக்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு பழனி, ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது.

பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களில் எஸ்.பி.ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த், இந்த படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

“கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய திரைக்கதை, இது. சர்வதேச அளவிலான ஒரு பிரச்சினை பற்றியும் படம் பேசும். இதில், விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கிறார்.

வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இசக்கி துரை தயார்க்கிறார். இணை தயாரிப்பு: ஆர்.கே.அஜய்குமார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘‘நடிகராக இருப்பதுதான் சிறந்தது’’
சீனுராமசாமி இயக்கி தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஜய்சேதுபதி. இவர் தனக்கென்று தனி பாணியை வைத்து இருக்கிறார்.
2. பண பிரச்சினையால் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு சிக்கல்
விஜய்சேதுபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் சங்கத்தமிழன். விஜய் சந்தர் இயக்கி உள்ளார்.
3. விஜய்சேதுபதி படத்தில் கவிஞர் முத்துலிங்கம் பாடல்
விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் கவிஞர் முத்துலிங்கம் ஒரு பாடல் இடம் எழுதியுள்ளார்.
4. நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம்; அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
வீட்டு உபயோக மற்றும் மளிகை பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவன விளம்பரத்தில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
5. தெலுங்கு படங்களில் நடிக்க விஜய்சேதுபதி, சத்யராஜுக்கு எதிர்ப்பு
தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் ஒரு குழுவினர் ஐதராபாத்தில் உள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-