சினிமா செய்திகள்

தந்தை விக்ரமுடன் இணைந்து நடிக்க ஆசை -துருவ் விக்ரம் + "||" + Dhruv Vikram's desire to co-star with Father Vikram

தந்தை விக்ரமுடன் இணைந்து நடிக்க ஆசை -துருவ் விக்ரம்

தந்தை விக்ரமுடன் இணைந்து நடிக்க ஆசை -துருவ் விக்ரம்
தந்தையுடன் இணைந்து நடிக்கும் ஆசை உள்ளது என்று நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கூறினார்.
நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ‘ஆதித்ய வர்மா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படம் குறித்து துருவ் விக்ரம் அளித்த பேட்டி வருமாறு:-

“அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் ரீமேக்காக ஆதித்ய வர்மா தயாராகி உள்ளது. எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்தது. எனது தந்தை நடித்த படங்களை விரும்பி பார்ப்பேன். இப்போது கதாநாயகன் ஆகிவிட்டேன். படப்பிடிப்பில் எனது தந்தையும் உடன் இருந்து வேலை செய்தார். கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருந்து. எனது பாணியில் நடித்து இருக்கிறேன்.

எனது தந்தை சினிமாவில் கஷ்டப்பட்டு உயர்ந்தார். சேது, ஐ என்று ஒவ்வொரு படத்துக்கும் உடலை ஏற்றி இறக்கி கதாபாத்திரமாக மாறினார். அவரது பெயருக்கு குறை ஏற்படாத வகையில் நடிக்க வேண்டும் என்பது எனது பொறுப்பாக உள்ளது. விக்ரம் மகன் என்று இல்லாமல் எனது தனித்திறமையை வெளிப்படுத்தும் படமாக ஆதித்ய வர்மா இருக்கும்.

எதிர்காலத்தில் தந்தையுடன் இணைந்து நடிக்கும் ஆசை உள்ளது. அந்த வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அவர் நடித்த பீமா எனக்கு பிடித்த படம். அதை ரீமேக் செய்து நடிக்கவும் ஆசை உள்ளது. படம் இயக்கவும் விருப்பம் உள்ளது.”

இவ்வாறு துருவ் விக்ரம் கூறினார்.