சினிமா செய்திகள்

படுக்கைக்கு அழைத்த நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார் + "||" + Actor is invite the bed: Isha Kopikar's Me Too complaint

படுக்கைக்கு அழைத்த நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்

படுக்கைக்கு அழைத்த நடிகர் :  இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைப்பதாக மீ டூவில் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு வருகின்றன.
 நடிகை இஷா கோபிகரும் தற்போது பாலியல் புகார் கூறியுள்ளார். இவர் நெஞ்சினிலே படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர். பிரசாந்த் ஜோடியாக காதல் கவிதை, அரவிந்த சாமியுடன் என் சுவாச காற்றே, விஜயகாந்துடன் நரசிம்மா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகர்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இஷா கோபிகர் கூறியதாவது:-

“ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னிடம் முன்னணி கதாநாயகன் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்து அந்த கதாநாயகனிடம் பேசும்படி கூறினார். அந்த நடிகருக்கு நான் போன் செய்தேன். அவர் தன்னை நேரில் சந்திக்கும்படி அழைத்தார். யாருடன் வருவீர்கள் என்று கேட்டார். டிரைவருடன் வருவேன் என்றேன். நீங்கள் தனியாக வாருங்கள் என்றார் அந்த பிரபல நடிகர். அவரது உள்நோக்கம் புரிந்தது. உடனே சுதாரித்து நாளை வர எனக்கு நேரம் இல்லை என்று போனை துண்டித்து விட்டு அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்தேன். எனது திறமை அழகை பார்த்து முடிந்தால் வாய்ப்பு கொடுங்கள் வேறு எந்த விஷயத்துக்கும் நான் உடன்பட மாட்டேன் என்று கூறிவிட்டேன்.”

இவ்வாறு இஷா கோபிகர் கூறினார். படுக்கைக்கு அழைத்த நடிகர் பெயரை அவர் வெளி யிடவில்லை.