விஜய்சேதுபதி படத்தில் கவிஞர் முத்துலிங்கம் பாடல்


விஜய்சேதுபதி படத்தில் கவிஞர் முத்துலிங்கம் பாடல்
x
தினத்தந்தி 12 Nov 2019 10:26 AM GMT (Updated: 2019-11-12T15:56:59+05:30)

விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் கவிஞர் முத்துலிங்கம் ஒரு பாடல் இடம் எழுதியுள்ளார்.

விஜய்சேதுபதி நடிக்க, ஜனநாதன் இயக்கும் புதிய படத்தில், கவிஞர் முத்துலிங்கம் எழுதிய ஒரு பாடல் இடம் பெறுகிறது. அந்த பாடல் டி.இமான் இசையில் பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீநிதியும், ரவிசங்கர் நாராயணனும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.

விஜய்சேதுபதியும், சுருதிஹாசனும் பாடுவது போல் அந்த காட்சி, படத்தில் இடம் பெறுகிறது. “உழைப்போம் உழைப்போம்...” என்று தொடங்கும் அந்த பாடல், கூட்டுப்பண்ணை விவசாயத்தை பற்றி சொல்கிறது.

கவிஞர் முத்துலிங்கம் எம்.ஜி. ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதியவர்.

Next Story