சினிமா செய்திகள்

பண பிரச்சினையால்விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு சிக்கல் + "||" + Because of the money problem Vijay Sethupathi, Sivakarthikeyan is a problem for films

பண பிரச்சினையால்விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு சிக்கல்

பண பிரச்சினையால்விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு சிக்கல்
விஜய்சேதுபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் சங்கத்தமிழன். விஜய் சந்தர் இயக்கி உள்ளார்.
விஜய்சேதுபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் சங்கத்தமிழன். விஜய் சந்தர் இயக்கி உள்ளார். விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போது வெளியாகவில்லை. இதையடுத்து நேற்று திரைக்கு வரும் என்று அறிவித்தனர். இதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டன.

ஆனால் திட்டமிட்டபடி படம் நேற்றும் ரிலீஸ் ஆகவில்லை. படம் பார்க்க தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். விஜயா புரடொக்‌ஷன்ஸ் ஏற்கனவே வெளியிட்ட படத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் வற்புறுத்துவதும் விஜய்சேதுபதிக்கு சம்பள பாக்கி இருப்பதுமே படம் வெளிவராததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுபோல் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்துக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தை ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களை எடுத்த ஆர்.டி.ராஜாவின் 24 ஏ.எம். நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்டது. மித்ரன் இயக்கி உள்ளார். படத்துக்காக கடனாக வாங்கிய தொகையை திருப்பி செலுத்தவில்லை என்றும், தற்போது படத்தை கே.ஜே.ஆர். பிலிம்சுக்கு கைமாற்றி உள்ளனர் என்றும், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹீரோ படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கவில்லை. ஹீரோ பட பெயரை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோபி போலீஸ் நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க. புகார்
கோபி போலீஸ் நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க.வினர் புகார் அளித்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...