சபரிமலை செல்ல பெண்கள் அடம்பிடிப்பதா? -நடிகை கஸ்தூரி


சபரிமலை செல்ல பெண்கள் அடம்பிடிப்பதா? -நடிகை கஸ்தூரி
x
தினத்தந்தி 18 Nov 2019 12:40 AM GMT (Updated: 18 Nov 2019 12:40 AM GMT)

பெண்கள் சபரிமலை செல்ல ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ள நிலையில் இது சம்பந்தமான வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டில் புதிய அமர்வு விசாரிக்க உள்ளது.

இந்த பிரச்சினை குறித்து விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. நடிகை கஸ்தூரியும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“குழந்தையின் கிறுக்கல் களை கூட பார்த்து, கண்விரித்து கைதட்டி கலையென்று மகிழ்வதுதான் மனித இயல்பு. பிடித்து வைத்த மஞ்சளிலும் பிள்ளையாரை பார்ப்பது நம்பிக்கை. கோவில் சிலையில் கலை நயத்தை உணர நம்பிக்கை தேவையில்லை. கண்பார்வை இருந்தால் போதும். கம்யூனிஸ்டு நாத்திக சீன அதிபருக்குகூட ரசிக்க தெரிந்தது.

இங்கு வன்மம் பிடித்த சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை. சபரிமலைக்கு சென்றே தீருவேன் என்று அடம்பிடிக்கும் பெண்களை எடுத்துக்கொண்டால்... தீவிர பக்தைகளா என்றால் அதுதான் இல்லை. பயங்கரவாதிகள், பகுத்தறிவுவாதிகள். பெண் உரிமை பெரும் போராளிகள்.

சபரிமலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை. பாவம். அய்யப்பன்தான் எந்த உரிமையும் கேட்டு போராடாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார். புனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும் உரிமை எதற்கு? சிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்பட வேண்டும். அது அவரின் பிறப்பினால் அல்ல. அவரின் குணத்தினால்.” இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

Next Story