சினிமா செய்திகள்

உடல் எடை குறைந்த நமீதா + "||" + Lose weight Namitha

உடல் எடை குறைந்த நமீதா

உடல் எடை குறைந்த நமீதா
நடிகை நமீதா கடும் உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறார்.
தமிழில் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி ஏய், சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நமீதா தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் தோன்றினார். ரசிகர்களை மச்சான்ஸ் என்று அழைத்து அவர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார்.

கடந்த சில வருடங்களாக நமீதாவுக்கு உடல் எடை கூடியது. திருமணமும் செய்து கொண்டார். இதனால் படங்களில் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர கடும் உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நமீதாவின் எடை குறைந்த அழகிய தோற்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.