சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் அமீர்கான் + "||" + Aamir Khan in the new look

புதிய தோற்றத்தில் அமீர்கான்

புதிய தோற்றத்தில் அமீர்கான்
லால் சிங் சத்தா படத்தில் அமீர்கானின் வித்தியாசமான தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சூர்யாவின் கஜினி படம் பிடித்துபோய் அதை இந்தியில் ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. அவரது லகான் படம் விருதுகளை குவித்தது.

2 பெண் குழந்தைகளின் தந்தையாக நடித்த டங்கல் படமும் வசூல் குவித்தது. இந்த படம் சீனாவிலும் ரூ.900 கோடி வசூலை தாண்டியது. சமீபத்தில் திரைக்கு வந்த தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படத்துக்கு பிறகு அமீர்கான் ‘லால் சிங் சத்தா’ என்ற படத்தில் நடிக்கிறார். ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான ‘பாரஸ்ட் கம்ப்’ன் இந்தி ரீமேக்காக இந்த படம் தயாராகிறது.

இதில் அமீர்கான் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் திரி இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்வைத் சந்தன் இயக்குகிறார். லால் சிங் சத்தா படத்தில் அமீர்கானின் வித்தியாசமான தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் வைரலாகி வருகிறது.

இந்த படம் அடுத்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.