சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் மோகன்ராஜா + "||" + Starring with vijaycetupati Mohanraja

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் மோகன்ராஜா

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் மோகன்ராஜா
‘யாதும் ஊரே யாவரும் கேளர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய படங்களை இயக்கி முன்னணி டைரக்டராக இருப்பவர் மோகன் ராஜா. இவர் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் ஆவார். அடுத்து புதிய படம் இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளர்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். வெங்கட் கிருஷ்ண ரேகாந்த் இயக்குகிறார். விஜய்சேதுபதி இசைகலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக வெளிநாட்டு நடிகை நடிக்க உள்ளார். சர்வதேச பிரச்சினை ஒன்றை கருவாக வைத்து இந்த படம் தயாராகிறது. இதில் இயக்குனர் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார்.

மோகன்ராஜா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

2014-ல் திரைக்கு வந்த என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்திலும் மோகன்ராஜா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.