சினிமா செய்திகள்

தர்பார்: முதல் சிங்கிள் டிராக் 27ம் தேதி வெளியீடு + "||" + Darbar The first single track to be released on the 27th

தர்பார்: முதல் சிங்கிள் டிராக் 27ம் தேதி வெளியீடு

தர்பார்: முதல் சிங்கிள் டிராக் 27ம் தேதி வெளியீடு
தர்பார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’க்கு(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த நவம்பர் 7-ம் தேதி ரிலீசானது. இந்நிலையில், தர்பார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் டிச.12ம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு டீசர், இசை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.