நெஞ்சை பதைக்க வைக்கும் காட்சிகளுடன் மணிபாரதியின் ‘பேட்டரி’


நெஞ்சை பதைக்க வைக்கும் காட்சிகளுடன் மணிபாரதியின் ‘பேட்டரி’
x
தினத்தந்தி 28 Nov 2019 10:00 PM GMT (Updated: 28 Nov 2019 9:11 AM GMT)

மணிபாரதி எழுதி இயக்கும் படத்துக்கு ‘பேட்டரி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

டைரக்டர்கள் வசந்த், மணிரத்னம், சரண் ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்தவர், மணிபாரதி. டைரக்டர்கள் லிங்குசாமி, ஹரி ஆகியோரின் கதை விவாதங்களில் பங்கேற்று வருபவர். இவர் எழுதி இயக்கும் புதிய படத்துக்கு, ‘பேட்டரி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. புதுமுகம் செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்க, ‘அசுரன்’ பட புகழ் அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் மணிபாரதி கூறுகிறார்:-

‘‘பொதுவாக நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகை படம்தான் இது. படத்தின் திரைக்கதை பரபரப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறது. சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில், ரவிவர்மா பச்சையப்பன்திரைக்கதை-வசனத்தை எழுதியிருக்கிறார். சி.மாதையன் தயாரிக்கிறார்.

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஏழைமக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அந்த துறையில் முறைகேடு நடந்தால், அதை ஏழை மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? அப்படி மருத்துவ துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது? என்பதை நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளாக படமாக்கி இருக்கிறோம். இதை குற்றப்பின்னணியிலான திகில் படமாக பார்க்கலாம்.

கதாநாயகன் செங்குட்டுவன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வருகிறார். இவருடைய கதாபாத்திரத்துக்கு இணையாக கதாநாயகி அம்மு அபிராமியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் மரியான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.’’

Next Story